tamilnadu

img

யெஸ் வங்கி நிறுவனரிடம் அமலாக்கத்துறை விசாரணை

மும்பை, மார்ச் 7- யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத்துறை அதி காரிகள் சனிக்கிழமையன்று விசா ரணை நடத்தினர்.   அதிகளவில் கடன் வாங்கிய யெஸ் வங்கி,  மூலதன நெருக்கடி யில் சிக்கியுள்ளது. வங்கியின் வராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும்  ரிசர்வ் வங்கி தன் வசத்திற்கு கொண்டுவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும் படி கட்டுப்பாடு விதித்தது. இத னால் அச்சமடைந்துள்ள அந்த வங்கியில் அக்கவுண்ட் வைத் துள்ளவர்கள்  மிகவும் அவதிக் குள்ளாகினர். 

இந்நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதி காரிகள் அதிரடி சோதனை நடத்தி னர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசா ரணை நடைபெறுவதாக தகவல் வெளியானது. யெஸ் வங்கி நிறு வனர் ராணா கபூர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.

;